முறைகேடான நிதி சேகரிப்பை மூடி மறைக்கும் வலய கல்விப் பணிப்பாளர்: ஊடகங்களில் வெளியான உண்மை (Photos)

Jaffna Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Kajinthan Jul 29, 2023 07:10 PM GMT
Report

முல்லைத்தீவு வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்காக சில ஆசிரியர்கள் தமது சொந்த வங்கிக் கணக்கில் சுமார் 4 இலட்சம் ரூபா வரை நிதி சேகரித்து செலவு செய்தமை ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் முல்லைதீதீவு வலயக்கல்வி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தில் குறித்த மணிவிழாவுக்கான மணிவிழா குழு நியமிக்கப்படவில்லை எனவும் ஆசிரியர்களால் இணைந்து அதை செய்ததாகவும் தகவல் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளரின் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

முறைகேடான நிதி சேகரிப்பை மூடி மறைக்கும் வலய கல்விப் பணிப்பாளர்: ஊடகங்களில் வெளியான உண்மை (Photos) | Officer Covering Up Illegal Collection Of Funds

சொந்தமாக நிதி சேகரிக்க முடியாது

மணிவிழா குழு என்பது கூடப்படவில்லை எனவும் ஆசிரியர்கள் தாமாகவே மணிவிழாவை முன்வந்து கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பத்திரிகை விளம்பரங்களிலும் செய்திகளிலும் மணி விழா அழைப்பிதழிலும் மணிவிழா குழு தலைவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்டது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி ஆசிரியர்கள் நேரடியாகவோ தமது சொந்த வங்கி கணக்கின் ஊடாகவோ நிதி சேகரிக்க முடியாது.

இவ்வாசிரியர்கள் நேரடியாகவும் மற்றும் தமது தனிப்பட்ட வங்கி கணக்கின் ஊடாகவும் நிதி சேகரித்துள்ளமைக்கு வலயக் கல்வி பணிப்பாளரால் எவ் விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் கடந்த 14.11.2022 அன்று மணிவிழா தொடர்பான தெளிவு கோருதல் என்று எழுதிய கடிதத்திற்கு இன்று வரை பாடசாலையால் பதில் வழங்கப்படாத போதிலும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரால் பதில் வழங்கப்படவில்லை.

முறைகேடான நிதி சேகரிப்பை மூடி மறைக்கும் வலய கல்விப் பணிப்பாளர்: ஊடகங்களில் வெளியான உண்மை (Photos) | Officer Covering Up Illegal Collection Of Funds

50 ஆயிரம் ரூபாய் நிதி

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் Np/Mu/Zonal/RTI/16 கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கு பழைய மாணவர் சங்க செயலாளர் (முன்னைய) தமது தகவல் கடிதத்திற்கு ஏன் பதில் வழங்கப்படவில்லை என வலயக் கல்வி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் மணிவிழா முடிந்த பின்னர் மணிவிழா தொடர்பான தெளிவு கோரலை பழைய மாணவர்கள் கேட்டதை இட்டு பழைய மாணவர்களின் நிதியை திருப்பி தருவதாக ஆசிரியர் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கடிதம் ஒன்றை வரைந்திருந்தனர்.

மணிவிழாவின் பின்னரும் 50 ஆயிரம் ரூபாய் நிதி ஆசிரியர் சங்கத்திடம் எவ்வாறு வந்தது இவ்வாறான முறைகேட்டை செய்த ஆசிரியர்களுக்கு எதிராக முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்காமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஆகவே வடமாகாண பாடசாலைகளில் பல்வேறு நிர்வாக முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் விசாரணை குழு அமைப்பதும் அதன் பின்னர் நடவடிக்கைகள் இன்று கிடப்பில் கிடப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US