ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக வே.சிவஞானசோதி நியமனம்
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றிய வே. சிவஞானசோதி இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளடங்கலாக 3 உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
