கனேடிய அரசாங்கத்தின் செயற்பாட்டை எதிர்த்து மட்டக்களப்பில் நிர்வாக முடக்கம்
கனேடிய அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிர்வாக முடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிர்வாக முடக்க நடவடிக்கையானது இன்றைய தினம் (23.06.2023) ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கனேடிய அரசாங்கதின் செயற்பாடுகள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டிருந்தன.
கவனயீர்ப்பு போராட்டம்

குறித்த நிர்வாக முடக்க நடவடிக்கையானது இன்று காலை 6.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை அரை நாள் நிர்வாக முடக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேசத்தின் பெருமளவான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் பிரதான இடங்களில் கறுப்பு கொடிகள் மற்றும் கனேடிய அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் எழுதிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இது தொடர்பில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இது தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ககேனடிய பிரதமரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படு கொலை நடைபெற்றதாகவும் அது குறித்து சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பொறுப்புக் கூறல் நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக கனடா தொடர்ந்தும் செயற்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri