சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்
அமெரிக்காவின் சுமார் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு "Ocean Odyssey" என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்தக் கப்பல் 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது.
இந்த கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் டிசம்பர் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு பயணிக்கவுள்ளது.
திருகோணமலை துறைமுகத்திற்கு பயணம்
இந்த கப்பலில் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கி சொகுசுப் பேருந்துகளில் இரண்டரை நாட்கள் கொழும்பு, குருநாகல் ஹபரணை, சிகிரியா, திருகோணமலை ஆகிய நகரங்களைச் சுற்றி வந்த பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் இருந்து புறப்படுவார்கள் என்று கப்பல் முகவர் நிறுவனமான "டேவ் மரைன்" தெரிவித்துள்ளது.
21ம் திகதி இரவு 7:00 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து, இந்த கப்பல், தாய்லாந்துக்கு புறப்பட உள்ளது.
கப்பல் கொழும்பு துறைமுகத்தை முதன்முறையாக வந்தடைந்ததைக் குறிக்கும் வகையில்,
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் .நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கப்பலின் தலைவருக்கு இடையில் சம்பிரதாய
நிகழ்வு இடம்பெற்றது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
