ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலப்பரப்பு : புதிய அரசாங்கத்தின் தீர்வு என்ன..!
தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு பிரச்சினையானது அரசியல் சார் செயற்பாடாக மாற்றப்பட்டு இனங்களுக்கிடையில் முரண்பாடு வளரும் அளவிற்கு விரிவடைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
இன்று (17) வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கும் நாடாளுமன்ற அமர்வின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
என்னைப் போன்றோருக்கு எதிராக சில மதத் தலைவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மிக மோசமாக செய்த அளவிற்கு பிரச்சினை வளர்ந்து விட்டது.
ஆகவே, எனது முதலாவது கேள்வியாக இந்தப் பிரச்சினையை மீள ஆரம்பிக்க போகின்றோமா இல்லை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்த செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கப் போகின்றோமா?
இந்நிலையில், அத்துமீறி சட்டவிரோதமாக மேய்ச்சல் தரையிலே குடியேறிய பெரும்பான்மை இனத்தவர்களால் கால்நடைகள் பலவும் கொல்லப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
