சந்திரசேகரன் மக்கள் முன்னணி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
சந்திரசேகரன் மக்கள் முன்னணி சார்பாக நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (15) தலவாக்கலையில் அமைந்துள்ள சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்.
சத்தியப்பிரமாணம்
கொட்டகலை பிரதேச சபைக்காக சிவசாமி பத்மநாதன், அகரபத்தனை பிரதேச சபைக்காக பாலகிருஷ்ணன் பிரதீப், நுவரெலியா பிரதேச சபைக்காக கனகசுந்தரம் லலித்குமார், நோர்வூட் பிரதேச சபைக்காக ஆறுமுகம் தியாகராஜா ஆகியோர் முன்னணியின் பொதுசெயலாளர் அனுஷா சந்திரசேகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்.
சத்தியப்பிரமாண நிகழ்வின் பின்னர் எமது மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், பிரதேச சபைகள் ஊடாக எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய சேவைகளை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் எமது மலையக மக்களின் நலனை கருத்திற்கொண்டு மாத்திரம் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தீர்மானங்கள் அமைய வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுஷா சந்திரசேகரனின் வழிகாட்டலில் நுவரெலியா மாவட்டத்தின் நான்கு சபைகளில் ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒவ்வொரு சபையிலும் தலா ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
