வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த பங்களாதேஷ் அணி வீரர்: வெளியான காணொளி
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிகுர் ரஹீம் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் பிரபலமாகி வருகின்றது.
ஆட்டமிழந்து விட கூடாது என்று நினைத்த முஷ்பிகர் பந்தை காலால் உதைக்க முயன்றபோது அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
அதாவது பந்தை விக்கெட்டுகளில் படாமல் தடுக்க முற்பட்ட போது தனது கால் விக்கெட்டுகளை தொட்டமையால் அவர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
Mushfiqur Rahim's Hilarious Dismissal Sets Internet On Fire#BANvNZ pic.twitter.com/YLtYs3ZPjC
— BlueGreen Planet (@BluesWaltair) September 26, 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் ஒவ்வொரு வெளிநாட்டு அணிகளும் ஆசிய கண்டத்தில் பயிற்சி பெறுவதற்காக ஒரு நாள் தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.
அவுஸ்திரேலிய அணி இந்தியாவிலும் நியூசிலாந்து அணி பங்களாதேஷிலும் விளையாடுகின்றன.
இதில் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி மிர்பூரில் நடைபெற்றது.
இதில் நாணயசுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தற்காலிக அணி தலைவர் நஜ்முல் ஹுசைன் அபாரமாக விளையாடி 76 ஓட்டங்கள் சேர்த்தார்.
தொடரை கைப்பற்றிய நியுசிலாந்து
தவ்ஹீத் 18 ஓட்டங்களிலும் , மஹமதுல்லா 21 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். முஸ்பிகுர் ரஹீம் களத்தில் பொறுமையாக இருந்து ஓட்டங்களை சேர்த்தார். 25 பந்துகளில் அவர் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.
இருப்பினும் 34.3 ஓவரில் பங்களாதேஷ் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் யங் 70 ஓட்டங்களும், ஹென்றி நிக்கோலஸ் 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 34.5 ஓவர்களில் எல்லாம் 175 ஓட்டங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியுசிலாந்து வென்றது.