நுவரெலியாவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கை(Photos)

Nuwara Eliya Sri Lanka Sri Lankan Peoples
By Thirumal Dec 22, 2022 07:28 AM GMT
Report

நுவரெலியா - இராகலை 2ஆம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 14 வீடுகளைக் கொண்ட முற்றாக எரிந்து தீக்கிரையானது.

இதனால் 14 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளனர்.

பல்வேறு அசௌகரியங்கள்

நுவரெலியாவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கை(Photos) | Nuwaraeliya Ragala Division Garden Fire Accident

மேலும், இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில்,தொடர்ந்தும் ஒன்றரை வருடங்களாக குறித்த கூடாரங்களில் பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான புதிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லானது, 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டப்பட்டு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கை(Photos) | Nuwaraeliya Ragala Division Garden Fire Accident

வீடமைப்பு பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் வாழும் தற்காலிக கூடாரங்களில் குடிநீர், மின்சாரம், மலசலக்கூடம் ஆகியன முறையாக இல்லாத காரணத்தால் தினந்தோறும் இவர்கள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் கோரிக்கை 

தற்போது அமைக்கப்பட்டுள்ள வீடுகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும், வீடுகள் கட்டப்பட்டுள்ள பகுதிகள் காடாக காட்சியளிக்கின்றது. அத்துடன், கட்டுப்பட்டுள்ள வீடுகளில் உள்ள சுவர்கள் வெடிப்புற்று காணப்படுவதையும் காணக்கூடியதாக இருந்துள்ளன.

நுவரெலியாவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கை(Photos) | Nuwaraeliya Ragala Division Garden Fire Accident

இந்த நிலையில் தமக்கான நிரந்தர வீடுகளும் இல்லாமல், தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாமலும் சொல்லன்னா துயரங்களுக்கு மத்தியில் வாழும் எமக்கு விடிவையும், உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US