ஊரடங்கு உத்தரவில் இருந்து நுவரெலியா விலக்கப்படவில்லை! வெளியான அறிவிப்பு
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இருந்து நுவரெலியா விலக்கப்படவில்லை என்று நுவரெலியா மாவட்ட செயலகம் இன்று தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் ஜி.கே.ஜி.ஏ. நந்தன இதனை தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல தங்கள் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று நந்தன கூறியுள்ளார். இதன் காரணமாகவே, சாலையில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மாவட்ட செயலாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய சேவைகள் தடையின்றி செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan