கோர விபத்து தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள் (video)
நுவரெலியா நானுஓயா, ரதெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நுவரெலியா கல்லூரி மாணவர்கள் இருவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
“கொழும்பு செல்லும் வழியில் நியுட்டலில் பேருந்து வேகமாக வந்தது. சிறிது தூரம் சென்றதும் பேருந்தின் வேகம் திடீரென அதிகரித்தது.பேருந்து வேகமாகச் சென்றதால் நாங்கள் பயந்து அலறித் கத்தினோம். அதே நேரத்தில், நாங்கள் பலத்த சத்தத்துடன் கீழே இழுக்கப்படுவதை உணர்ந்தோம்” என நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த தேஸ்டன் கல்லூரியின் மாணவர் கூறினார்.
இந்த பயணத்தில் கலந்து கொண்ட விபத்துக்குள்ளான கல்லூரி மாணவர் ஒருவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது, 41 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அதில் ஐந்து மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 4 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தனது அனுபவத்தை பகிர்ந்த மாணவன்,
“ஹக்கல தாவரவியல் பூங்காவை பார்வையிட்ட பின்னர், நுவரெலியா கிரிகோரி ஏரிக்கு அருகில் மதிய உணவு சாப்பிட வந்தோம். அங்கே மதிய உணவுக்குப் பிறகு சிறிது தாமதமாகப் புறப்பட்டோம். எங்களுடன் வந்த பேருந்துகள் முதலில் புறப்பட்டன. எங்களுடன் ஒரு மாணவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது, எனவே நாங்கள் இன்னும் 45 நிமிடங்கள் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது.
பேருந்து கவிழ்ந்ததும், பின் இருக்கையில் இருந்தவர்கள் அனைவரும் முன்னோக்கி தூக்கி வீசப்பட்டனர். எங்கள் பேருந்தில் 41 பேர் இருந்தனர், ஆனால் நாங்கள் நான்கு பேர் மட்டுமே அவர்களுக்கு உதவ முடிந்தது.
எங்கள் பஸ் சாரதி சற்று வயதானவர். இந்த விபத்தின் போது, அப்பகுதி மக்கள் காயமடைந்த மாணவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 7 வகுப்புகளில் படிக்கும் நாங்கள் இந்த பயணத்திற்கு வந்தோம். இங்கு பயணித்த மாணவர்களின் கைகால் முறிவுகள் மற்றும் தலைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் நான் என் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த உடனேயே, எனது தந்தைக்கு தகவல் தெரிவித்தேன், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது," என்று மாணவர் கூறினார்.
தேஸ்டன் கல்லூரியின் மற்றொரு மாணவர் தகவல் வெளியிடுகையில்
"நாங்கள் மிக வேகமாக வந்தோம். நாங்கள் அனைவரும் அலறினோம். நான் முன் இருக்கையில் இருந்தேன். எதுவும் தெரியவில்லை, இருட்டாக இருந்தது. அப்போது பலத்த சத்தத்துடன் தூக்கி வீசப்பட்டது போல் உணர்ந்தோம். நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்றிலேயே மோதப்பட்டதாக எங்களுக்கு தெரியும்.
இரும்பு கம்பியில் மோதி கீழே விழுந்தோம். எங்கள் மாணவர்களின் கைகள், கால்கள் கைகள் உடைந்துள்ளன, அவர்களின் தலைகளிலும் காயங்கள் ஏற்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.