அபாய களமாக மாறும் நுவரெலியா - ஹக்கலை வீதி
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து ஏற்பட்ட இடமானது டித்வா (Ditwah) சூறாவளி காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய பகுதியாக காணப்படுபடுகிறது என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் விபத்துக்கள்
நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று தடையாழி செயலிழந்து விபத்திற்குள்ளாகியது.
இதனையடுத்து வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இரண்டாவதாக ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியதில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூன்றாவாதாக அதே இடத்தில் நேற்று(02) மாலை இ.போ.ச பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர்.
எனவே, இனியும் விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் வீதியை அகலப்படுத்தி கொடுப்பதற்கும், குன்றும், குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு முன்னரும் இந்த வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
நேபாள நீர்மின் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள்... அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல் News Lankasri