நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Video)
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும், முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்தி, வாழ்வாதாரத்தினை அதிகரிக்கவும், வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறைக்கவும், ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வான் உயரத்தில் பண வீக்கம் நடுவீதியில் உத்தியோகஸ்தர்கள் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
பாரியளவில் போராட்டம்
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டத்தினை அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலயம் வைத்தியசாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
