தாதிய உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தினை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆளுநர் பணிபுரை
வட மாகாணத்தில் கடமையாற்றும் தாதியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனுக்குப் பணிபுரை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட மாகாணத்தில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றத்தை மேற்கொள்வதற்காக வட மாகாண சுகாதார பணிப்பாளர் நடவடிக்கை எடுத்த நிலையில், குறித்த விடையம் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார உத்தியோகத்தர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக கருதப்படும் நிலையில், குறித்த இடமாற்றத்தை நிறுத்துமாறு வடமாகாண தாதிய சங்கம் ஆளுநரை கோரியதன் அடிப்படையில் இடமாற்றம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri