இலங்கையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபங்களின்படி, தற்போது 9,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நடத்திய சந்திப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்
பகல்நேர பராமரிப்பு மையம்
சரியான நோயறிதல் இல்லாததால், பல பிள்ளைகள் தொடர்ந்து பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூட்டத்தின் போது அமைச்சர் போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை, அவர்களின் ஆரம்ப வளர்ச்சி நிலைகளில் அடையாளம் காண வேண்டும் ஆரம்பகால நோயறிதலின் மூலம் மட்டுமே அவர்கள் ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையை நோக்கி வழிநடத்தப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் அமைச்சர் போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |