சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: திடீரென பின்வாங்கும் மகிந்த ராஜபக்ச
நுகேகொடையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்தும் பேரணி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்க உள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் எதிர்ப்பு பேரணிக்கு 'மாபெரும் மக்கள் குரல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பேரணியில் பங்கேற்பதாக முன்னர் அறிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பேரணிக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பேரணிக்கு அழைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இல்லாமல் நடத்தப்படும் பேரணி எவ்வாறு எதிர்க்கட்சி பேரணியாக இருக்கும் என்பது குறித்தும் உதய கம்மன்பில நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri