ஈரானின் அணு உலை பொருட்கள் அழிக்கப்படும் : ட்ரம்ப் அறிவிப்பு
சாத்தியமான அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் செறிவூட்டப்பட்ட அணு உலை பொருட்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு, அமெரிக்காவினால் அழிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த அணு உலை பொருட்களைக் கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கையானது, ஈரான் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் ஒருங்கிணைப்புடன் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிடம் தற்போது கையிருப்பில் உள்ள
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், பலவந்தமாக உள்ளே நுழைந்து யுரேனியத்தை மீட்கப்போவதாக இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.

சர்வதேச அணுசக்தி ஆய்வாளர்களின் முந்தைய கணிப்புகளின்படி, ஈரானிடம் தற்போது கையிருப்பில் உள்ள இந்த உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அடுத்தகட்டமாகச் சுத்திகரிப்புச் செய்தால், அதனைக் கொண்டு 10 அணு ஆயுதங்களை (Nuclear Weapons) உருவாக்க முடியும் என கணித்துள்ளனர்.