இந்திய இராணுவத்தின் தலையீட்டினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள்: அனுர விசனம்
இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தில் இந்திய இராணுவத்தின் தலையீட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது வடக்கு மக்களே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake )சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் உரையாற்றும் போது, இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி மக்களுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக தான் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை மேற்கொள்ளவில்லை.
புதிய ஜனாதிபதி தெரிவு
தேசிய மக்கள் சக்தி தலைவர் இலங்கையில் இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருப்பார்.
சாதாரணமாக வடக்கு வாழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. ஏன் அது? ஜனாதிபதி தேர்தல் என்பது கொழும்புக்கான தலைவரை தேரந்தெடுக்கும் தேர்தல் என யாழ் மக்கள் நினைக்கிறார்கள்.
எனினும், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் மக்கள் தெரிவு செய்கிறார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
எனினும் ஒரு நாட்டின் ஜனாதிபதி மேற்கொள்ளும் தீர்மானங்கள் அந்த நாட்டின் எதிர்காலத்தையும் மக்களையும் பாதிக்கும். இதனால் வடக்கு வாழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை பொருட்படுத்தாது இருக்க கூடாது.
இலங்கை மக்களின் எதிர்காலம்
கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் காரணமாக இலங்கை மக்களின் எதிர்காலம் இருளடைந்து காணப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பலர் போலி வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
மக்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்கிறார்கள். “எனக்கு வாக்களித்தால் நான் இதனை செய்கிறேன்“ என சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். இதனை நம்பும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்.
தற்போது பல கட்சி மாநாடுகள் மக்களுடனான ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகின்றன.
எனினும், நாம் இந்த நடவடிக்கையை செய்ய மாட்டோம். மக்களுடன் நாம் ஒப்பந்தங்களை மேற்கொள்ள மாட்டோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு உள்ளிட்ட அனைவருடனும் நாம் இணைந்து செயல்படுவோம்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |