நாட்டை மாற்ற காலம் தேவை - டில்வின் சில்வா
நாட்டை ஒரே நாளில் அபிவிருத்தி செய்யவும், சமுதாயத்தை மாற்றவும் முடியாது என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசை உருவாக்கிய இலக்குகளை அடையும் வரை அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வவுனியாவில் நடைபெற்ற “ஏப்ரல் வீரர் தின” நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு, பழைய அரசியல் அமைப்பை மாற்றி புதிய முறையை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் மக்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

76 ஆண்டுகளாக நிலவி வரும் பழைய அமைப்பை மாற்றுவது எளிதான காரியம் அல்ல எனவும், அதற்காக பழைய சட்டங்கள், நிறுவன கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தையும் மாற்ற வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்களது மாற்றங்களை நிறைவேற்ற 10 முதல் 25 ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முழு சமுதாயத்தையும் மாற்ற பல ஆண்டுகள் தேவைப்படுகிறது எனவும் அரசை உருவாக்கிய இலக்குகளை அடையும் வரை நாம் அதைப் பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது என ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri