கூட்டுறவுத் தேர்தலில் ஆளும் தரப்புக்கு பின்னடைவு!
இலங்கையின் சில பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு பெற்ற குழு களனி கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதில் 99 உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதே நேரத்தில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு பெற்ற குழு, 32 உறுப்பினர்களை மட்டுமே தெரிவு செய்ய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி
மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குனகொலபெல்லஸ்ஸ சங்கத்திலும் இதேபோன்ற நிலை தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.

அங்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு பெற்ற ஒரு சுயாதீனக் குழு 143 உறுப்பினர்களுடன் வெற்றி பெற்றது, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு பெற்ற குழுவின் 128 உறுப்பினர்கள் மாத்திரமே நிர்வாகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், மஹர கூட்டுறவு சங்கத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற முடிந்தது அங்கு, 100 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில், ஆளும் தேசிய மக்கள் சக்தியின் 89 உறுப்பினர்கள் அங்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri