உதயகம்மன்பிலவின் இனவாதக்கருத்துக்களுக்கு NPP பதிலடி!
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் அரசாங்கத்தை இலக்குவைக்கும் கருத்துக்கள் தொடர்பில் அரசியல் தரப்பில் வாதப்பிரதிவாதங்கள் வலுத்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி தொடர்பில் ஒவ்வொரு நகர்வுகள் குறித்தும் சர்ச்சைகளை கிளப்பும் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தும் கம்மன்பிலவின் இந்த செயற்பாடு அரசாங்கத்துக்கு ஒரு சவால்நிலையை ஏற்படுத்தும்.
இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதியின் ஜெர்மனி விஜயம் குறித்து கம்மன்பில தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக சி.ஐ.டியில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 323 கொள்கலன்கள் விடுவிப்பு விடயத்தில் மோசடி இடம்பெறவில்லை எனத் தெரிவிப்பதற்கு, இந்த அரசாங்கம் தங்களுக்கும், ஜனாதிபதிக்கும் நெருக்கமானவர்களை உபயோகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியுடன் ஆலோசனை அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வது குறித்து, ஜனாதிபதியுடன் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கம்மன்பில சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் அரசாங்கம் மீதான கேள்விகளை சமூகத்தின் மத்தியில் எழுப்பியுள்ள நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் பின்னணி தொடர்பிலும், கம்மன்பிலவின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் தொடரும் காணொளியில் பகிரங்க கருத்துக்களை தாஹா ஐன்ஸ்டீன் முன்வைத்துள்ளார்...





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
