அநுர தரப்பின் பேரணிக்கு ஆட்களைத் திரட்டுவதற்காக பொலிஸாரின் உதவி
தேசிய மக்கள் சக்தி தங்காலை பிரதேசத்தில் நடத்தவிருக்கும் பேரணிக்கு ஆட்களைத் திரட்டுவதற்காக பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு மக்களை அணிதிரட்டுமாறு கோரி, தெற்கில் உள்ள காலி, மாத்தறை மற்றும் ஏனைய பகுதிகளிலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் மறுப்பு
மேலும், பேரணியில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்யுமாறும் பொலிஸார் கேட்கப்பட்டுள்ளதுடன், பேரணிக்கு அணிதிரட்டப்படும் ஆட்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அதற்கான கையொப்பத்தை இடுமாறு பொலிஸ் பிரதிநிதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எனினும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்ததுடன், பொலிஸ் விவகாரங்களில் அரசாங்கம் ஒருபோதும் செல்வாக்கு செலுத்துவதில்லை என்றும் உறுதியளித்தனர்.
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri