மக்கள் நலனை அடிப்படையாக கொண்டே அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது:பிரபு எம்.பி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டங்களும் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
ஒபட்ட கெயக்- ரட்டட ஹெட்டக்" செமட்ட நிவஹண தொணிப்பொருளில் மானிய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (19) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இந்த நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நிலையிலும் வாழ முடியாத பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் இந்த நாடு அசௌகராயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்ததை இந்த நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடன் தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைமை காணப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
ஆனாலும் தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை ஆட்சி பீடம் ஏற்றதன் பின்னர் புதிதாக ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பார்த்து மக்களுக்காக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களுக்கு அதற்கான முன்னேற்றகரமான விடயங்களை செய்து வருகின்றோம், நிவாரணங்களை வழங்கி வருகின்றோம்,அதன் அடிப்படையில் இன்றும் உங்களது அடிப்படை தேவையான வீட்டு தேவைகளை நிறைவு செய்வதற்கான மானிய தொகையினை இன்று உங்களுக்காக வழங்க காத்திருக்கின்றோம்.
இன்னும் பல விடயங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்கின்ற ரீதியில் நாங்கள் செயல்படுத்துவோம்.எதிர்வரும் காலங்களில் இன்னும் பல விடயங்களை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
