புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர தரப்பு
எமக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் எனவும், புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உறவுகள் ஒன்றிணைந்து எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும் என்றும், வடக்கில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரியதொரு வெற்றி
“எமக்குக் கிடைத்த வெற்றி என்பது மக்களுக்கு கிடைத்த பெரியதொரு வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.
ஏனென்றால், இதுவரை காலமும் இருந்த அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பின் காரணமாகவும், அவர்களது பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவும்,ஐக்கியத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையுடனும் மக்கள் இந்த வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.
இந்தத் தேர்தலில் எமக்கு பல தொழிற்சங்கங்கள் உதவி செய்திருக்கின்றன. அந்த தொழிற்சங்கங்களுக்கும் மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
