கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளரை பெயரிட்ட தேசிய மக்கள் சக்தி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை வேட்பாளர் பெயரிடப்பட்டுள்ளதாக, ஜே.வி.பி.பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin Silva) அறிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற விராய் கெலி பல்தசார், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
இவர் ஒரு சட்டத்தரணியாகவும், சமூக ஆர்வலராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.
இதற்கிடையே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் முக்கிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைமை வேட்பாளர்களாக பெண்களை முன்னிறுத்தவும், வேட்பு மனுவில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 16 மணி நேரம் முன்

2 கதாநாயகன், 2 நாயகி வைத்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிக்கப்போவது இவர்தானா? Cineulagam

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan
