வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகமும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் தொடர்பாடல் காரியாலமும் வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில் இன்று(9) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் புதிய அலுவலகத்தை நாடாவெட்டி திறந்து வைத்துள்ளனர்.
தமிழரசுக் கட்சி
இதன்போது கட்சியின் பிரதேச கிளைக்களுக்கு பொறுப்பானர்கள் மற்றும் மகளிர் அணி செயற்பாட்டாளர் ஆகியோருக்கான நியமன கடிதமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், இ.சாணக்கியன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், மாவட்டகிளையினர் என பலர் கலந்து கொண்டனர்.
மத்திய குழுக் கூட்டம்
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் சென்றிருந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற்றது.
அதில் கட்சியின் முக்கிய உறுப்பினரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.
சி.சிறீதரன்
மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகமும், , நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தொடர்பாடல் அலுவலகமும் குருமன்காடு, காளி கோவில் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், , நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், இ.சாணக்கியன், கொழும்பு கிளைத் தலைவர் சட்டத்தரணி இரட்னவடிவேல் மற்றும் முன்னாள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், மாவட்ட கிளையினர் என பலர் கலந்து கொண்டனர்.
ஆனால், நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறீதரன் குறித்த அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாது மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் வெளியேறிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan
