அம்பாறையில் தேசிய மக்கள் சக்தியின் துண்டுப் பிரசுர விநியோகம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் (NPP) துண்டுப் பிரசுரம் ஊடாக அம்பாறை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தது.
இதற்கமைய கடந்த 22 ஆந் திகதி வியாழக்கிழமை முதல் கொண்டு இன்று (26) வரை ஒலுவில் கல்முனை சாய்ந்தமருது நிந்தவூர் மருதமுனை நற்பிட்டிமுனை மாளிகைக்காடு பெரிய நீலாவணை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தமது பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
கட்சி செயற்பாட்டாளர்கள்
மேலும்“நாடு அநுராவோடு. அவரின் வெற்றியில் நாமும் பங்காளியாக இருப்போம். வாரீர் மாற்றத்தை நோக்கி பயணிப்போம் வளமான நாடு அழகான வாழ்க்கை” என பிரச்சார துண்டுப்பிரசுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கட்சி செயற்பாட்டாளர்கள் விநியோகித்து வருகின்றனர்.
அனுரவின்
வெற்றியை இந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் ஊடாக உறுதிப்படுத்த இவ்வாறான
செயற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ உட்பட
கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா மற்றும் தேசிய மக்கள் சக்தியின்
செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam