இந்த அரசாங்கத்திற்கு அனுபவம் கிடையாது – அஸ்கிரி பீடாதிபதி
இந்த அரசாங்கத்திற்கு போதியளவு அனுபவம் கிடையாது என அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளக் கூடிய அளவிற்கு இந்த அரசாங்கத்திற்கு அனுபவம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த விடயம் தொடர்பிலான நடவடிக்கைகள் எடுப்பது பொருத்தமானது என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வியின் ஊடாகவே நாட்டின் மாண்பு பாதுகாக்கப்படுகின்றது என அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க நாரம்பராவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மாண்புகளுக்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையிலான செயற்பாடுகளை எதிர்ப்பதாகவும் அது எந்த அரசாங்கம் என்பது பற்றிய கரிசனை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.