பாலர் பாடசாலை பிள்ளைகளாலும் இவ்வாறு திறைசேரியை நிரப்ப முடியும்
பலர் பாடசாலை பிள்ளைகளால் கூட இவ்வாறு திறைசேரியை நிரப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
மக்கள் மீது அதீத வரி சுமையை திணித்து அரசாங்கம் வருமானம் ஈட்ட முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு மிக மிஞ்சிய அளவில் வரிகளை அறவீடு செய்து திறைசேரியை நிரப்புவதற்கு பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கும் முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் மக்களின் மீது வரிச் சுமையை திணிக்கின்றது இந்த அரசாங்கம் மக்களின் மீது வரி அழுத்தத்தை பிரயோகிக்கிறது என்று சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரை செய்யப்பட்டதை விடவும் அதிக அளவில் இந்த அரசாங்கம் மக்கள் மீது வரிச் சுமையை திணித்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேவையற்ற வகையில் வரிகளை விதித்து அரசாங்க திறைசேரியை நிரப்புவது ஒரு பெரிய விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் வரி செலுத்துவோரிடமிருந்து 287 பில்லியன் ரூபாவை சூறையாடியுள்ளது என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam