சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளது
நாட்டுக்கு முன்னால் உள்ள சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் தற்போது பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வருடம் முதல் வீடமைப்பு நிர்மாண உதவித்தொகையை 15 இலட்சம் ரூபா வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர், அரசாங்கம் மக்களிடமிருந்து வரிப் பணத்தை அறவிடுவது, அந்தப் பயன்களை மீண்டும் நிவாரணங்களாக மக்களிடமே வழங்கும் நோக்கத்துடனேயே என வலியுறுத்தினார்.

அதற்கமைய, நடப்பு ஆண்டில் வீடமைப்பு நிர்மாண உதவியாக வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியை எதிர்வரும் ஆண்டில் 15 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானித்துள்ளதாக அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.
மேலும், தேசிய வரவு செலவுத் திட்ட முகாமைத்துவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், திறைசேரியில் உள்ள அனைத்து நிதியையும் அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு மட்டும் ஒதுக்குவதற்கு எந்தவொரு அரசாங்கத்தாலும் முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்மாணத் துறைக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது கட்டாயமானதொரு பணியாகும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
நெருங்கிய ரஷ்ய இராணுவ விமானங்கள்... பீதியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தென் கொரியா News Lankasri