அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து மகிழ்ச்சி வெளியிடும் ரவி கருணாநாயக்க
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் தாங்கள் ஆரம்பித்த பாதையில் பயணிப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு தங்களது பாதையில் பயணத்தை தொடர்வது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை எங்களது திட்டங்களையே தொடர்ந்தும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் நாங்கள் பத்து பதினைந்து விடயங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்தாலும் இந்த அரசாங்கம் ஒன்று இரண்டு விடயங்களை மட்டுமே முன்னெடுக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்த விடயம் தொடர்பில் நான் எனது கரிசனையை வெளியிடுகின்றேன் என ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam