பொய்யர்களின் கூடாரமே இந்த அரசாங்கம்! சஜித் பிரேமதாச
ஆகப் பெரும் பொய்யர்களின் கூடாரமே இந்த அரசாங்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இன்று (27) ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்துமே பொய் வாக்குறுதிகளாகும். அவற்றில் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
பொய் வாக்குறுதி
இனி வரும் காலங்களில் நிறைவேற்றப் போவதும் இல்லை. பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்குவதாக கூறினார்கள். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். இப்படியாக ஏராளம் வாக்குறுதிகளை அள்ளிவீசியே அதிகாரத்துக்கு வந்தார்கள்.
ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றும் எண்ணம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை.
இந்த அரசாங்கம், ஆகப் பெரும் பொய்யர்களின் கூடாரம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
