கடந்த அரசாங்கத்தின் பாதையில் இந்த அரசாங்கம் பயணிக்கின்றது! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கடந்த அரசாங்கத்தின் பாதையில் இந்த அரசாங்கம் பயணிப்பதாக முன்னிலை சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜாகொட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் தற்போதைய மற்றும் கடந்த அரசாங்கங்கள் மீது இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு
அரசாங்கம் இன்று 5 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு உண்டு மார்தட்டிக் கொண்டாலும், நாடு வங்குரோத்து அடைந்து விட்டதாக அறிவித்த காலத்திலும் இலங்கையிடம் 10 பில்லிய்ன டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது என தெரிவித்துள்ளார்.
அதி புத்திசாலி எனக் கூறப்படும் மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங் உள்ளிட்டவர்கள் இந்த அழிவிற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வாகனங்களை கொள்வனவு செய்தால் மீண்டும் நாட்டில் டொலர் கையிருப்பு குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை செலுத்த வேண்டியுள்ள 12 பில்லியன் டொலர் சர்வதேச பிணை முறி பத்திரங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடனாக பெற்றுக்கொண்டார் என புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.