மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் என்.பி.பி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணி சாடல்
அரசு தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது என்றும், ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியின் தலைவி குமாரி பத்திரகே குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(19.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினரைக் குற்றவாளிகளாக
மேலும் தெரிவிக்கையில், "அரசு தாம் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பாக உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான தகவல்களையே மக்களுக்குக் கூற வேண்டும்.
ஆனால், கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொய்களை மட்டுமே இந்த அரசு கூறி வருகின்றது.

இத்தகைய பொய்களை சர்வதேச நாடுகள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
நாட்டின் அடுத்த தலைமுறையினரைத் தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பகடைக்காய்களாக அரசு பயன்படுத்தி வருகின்றது. மின்சாரத் தடையால் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளை மறக்கடிக்கவே, ராஜபக்ச குடும்பத்தினரைக் குற்றவாளிகளாகக் காண்பித்து அரசு தப்பித்துக் கொள்ளவும், மக்களைத் திசைதிருப்பவும் முயற்சிக்கின்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மதத் தலைவர்களுக்கு எதிராக அரசு
வரவு - செலவுத் திட்டத்தில் வரிச் சலுகைகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், சிறுவர்களின் விளையாட்டுப் பொருள்களுக்குக் கூட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், "அரசியல்வாதிகள் அரச வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பயணங்கள் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு வழியமைக்கக் கூடாது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கை, தற்போது சர்வதேசத்தின் விருப்பத்துக்கு ஏற்பச் செயற்பட்டு வருவது கவலையளிக்கின்றது.
அத்துடன், புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் திருத்தங்கள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நாட்டில் காவி உடை அணிந்த பௌத்த மதத் தலைவர்களுக்கு எதிராக அரசு செயற்படுவது மிகவும் ஆபத்தானது" என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri