நாட்டை முன்னேற்றுவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது
நாட்டை முன்னேற்றுவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் உள்ளுராட்சி மன்றங்களை நிறுவுவதில் சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களை துரித கதியில் நிறுவ வேண்டிய அவசியம் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுடன் அந்த தேவையும் நிறைவேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிராமிய மக்களின் வறுமையை ஒழிப்பது, கிளீன் சிறிலங்கா திட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இனி சுலபமானது என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வந்த முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan