புதிய இறக்குமதி கொள்கைகள் அறிவிப்பு
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில், புதிய இறக்குமதி கொள்கை திருத்தங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி தடை நீக்கம்
இதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இறக்குமதி பொருட்கள் மீதான தற்காலிகத் தடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த புதன்கிழமை நீக்கப்பட்டது.

ஏற்கனவே ஜூலை 9 முதல், மலசலக்கூட துடைப்பி (டொய்லட் பேப்பர்), கட்டுமான பொருட்கள், இயந்திர பாகங்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள் உள்ளிட்ட 159 பொருட்களுக்கான தடை நீக்கப்பட்டது.
இதேவேளை ஆகஸ்ட் 23 முதல் இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர்கள் அதிருப்தி
குறிப்பாக மூன்று வாரங்களாக இருந்த இறக்குமதி தடையால் உணவக உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உள்ளூர் விருந்தோம்பல் துறையானது சர்வதேச சுற்றுலாத் தளங்கள் மற்றும் உணவகங்களுடன் போட்டியிடும் நிலையில் இந்த அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதேவேளை வங்கிகளின் நாணயக் கடிதங்கள் படிப்படியாக இயல்படைந்து வருவதால்,
பொருட்களின் வர்த்தகர்கள் மற்றும் மொத்த இறக்குமதியாளர்களால் தங்கள் கொள்கலன்களை
விரைவாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடிகின்றது என புறக்கோட்டை வர்த்தகர்கள்
சங்கத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri