கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்தவுடன் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
    
    நடுக்கடலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து! ராஜபக்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - சஜித்

ஒழுக்கம் தொடர்பான விதிகள்
ஏற்கனவே, ஒழுக்கம் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதனை கடைப்பிடிக்காமையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. அதனை கருத்திற்கொண்டு, புதிய சுற்று நிருபம் வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை, அடுத்த வாரத்தின் இரண்டு நாட்கள், அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், கல்வி பணிப்பாளர்கள் அனைவரும் கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு நாட்களிலும், பாடசாலைகளின் ஒழுக்கம், கல்வி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan