பிரித்தானிய இளவரசியின் யாழ். விஜயம்: ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று(11) இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் வலையொளி அலைவரிசை (YouTube Channel) உள்ளிட்ட நால்வருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு இளவரசி வருகைதரவுள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் அரச பயணம்
இலங்கையின் பிரபல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதியளிக்கபடவில்லை என கூறப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ்ப்பாணத்தில் இயங்கும் அறக்கொடை நிலையம் ஒன்றின் ஊடகப் பொறுப்பாளரே நான்கு பெயரை சிபாரிசு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசியின் வட மாகாணத்துக்கான முதல் அரச பயணமாக இந்த பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கஜி
கிளிநொச்சி
மேலும், கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி கிளிநொச்சி முகமாலைப் பகுதியிலுள்ள மனிதாபிமான கண்ணி வெடியகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அத்தோடு, கண்ணிவெடி அகற்றும் இடங்களையும் அதேபோல கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் மீள் குடியேறிய இந்திராபுரம் பகுதிக்கும் சென்று பார்வையற்றுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து பளை முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களையும் மீள் குடியேற்றப்பட்ட மக்களையும் சந்தித்திருந்தார்.
செய்தி - யது

நடுக்கடலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து! ராஜபக்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - சஜித்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 45 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
