கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இரவு வேளையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டில் கொழும்பு, கம்பஹா, அம்பாறை, மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த மாதத்தின் இரவு வேளைகளில் வழமையாக நிலவும் வெப்பத்தை விடவும் அதிக வெப்பம் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சில மாவட்டங்களில் வழமையான வெப்பநிலை மேலும் வீழ்ச்சியடையக்கூடும். குறிப்பாக புத்தளம், மன்னார், அநுராதபுரம், கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பகல் வேளையில் நிலவும் வழமையான வெப்பநிலையின் அளவு வீழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குருணாகல், கண்டி, காலி மற்றும் இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களும் அதில் உள்ளடங்குகின்றன.
அத்துடன் இந்த மாதம் கேகாலை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
