வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பொருட்கள்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தகரப்பொருட்களில் அடைக்கப்பட்ட பெருமளவு உணவுப்பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மனித பாவனைக்கு தகுதியற்ற சில டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுப்பொருட்கள்
மனித பாவனைக்கு தகுதியற்ற சில தகர உணவுப்பொருட்களை ஏலத்திலிருந்து எடுக்கப்பட்டு புதிய பொதிகளை பயன்படுத்தி சந்தையில் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களை விட தரமற்ற டின் மீன்கள் நூறு முதல் இருநூறு ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இது குறித்து மக்கள் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.