அரசாங்கம் வழங்கிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கே வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்த தெரிவித்துள்ளார்.
நிர்மாணிக்கப்பட்ட வீடுகள்
கொழும்பு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நகர வதிவிட அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் உரிமை இவ்வாறு வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய 52000 வீடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
