எரிபொருட்களுக்கான விலை குறித்து அறிவிப்பு
எரிபொருட்களுக்கான விலை குறித்து மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு நாட்டில் எரிபொருட்களுக்கான விலை உயர்த்தப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை பெற்றுக்கொள்வது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அந்த எண்ணெய்த் தாங்கிகளில் பெரும்பாலானவற்றை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீளவும் பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




