மின் பாவனை குறித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. .
அந்நிய செலாவணி நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் நாடு போராடுவதன் காரணமாக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தித் துறையானது முழுத் திறனுடன் செயற்படத் தொடங்கும் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு அதிகார சபை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மின்னணு அடையாள பலகைகள், எல்இடி அடையாளங்கள் மற்றும் பெயர்ப் பலகை விளக்குகளை அணைக்குமாறும், இரவு நேரங்களில் அடையாள பலகைகளை ஒளிரச் செய்வதற்கு விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரியுள்ளது.
தேசிய மின்வட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கட்டிடங்களின் மின் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாத்திரம் விளக்குகளை பயன்படுத்துமாறும் நிலையான எரிசக்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
