சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கோவிட் தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து உடனடியாக பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் மாத்திரமே இதுவரை பதிவாகியுள்ளதாகவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு தீவிரமான நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளதாகவும், எனவே தடுப்பூசி போடுவது தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam