வவுனியா பொது வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவித்தல்
தற்பொழுது நாட்டில் நிலவும் கோவிட் தொற்று காரணமாக வைத்தியசாலை சமூகத்தினரினதும் நோயாளர்களினதும் நலன் கருதி நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் தெரிவித்துள்ளார்.
தங்களது உறவினர்களோ அல்லது நண்பர்களோ தங்கியுள்ள விடுதியிலிருந்து வழங்கப்படுகின்ற நோயாளர் பார்வையிடும் அட்டையினைக் கொண்டு ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே உள் நுழைய முடியும்.
நோயாளர்களை காலை 6.00 மணி தொடக்கம் 7.00 மணி வரையும், மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரையும், மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையும் மாத்திரமே பார்வையிட அனுமதிக்க முடியும்.
ஏனைய நேரங்களில் நோயாளர்களை பார்வையிட வருவதையோ, நோயாளர் பார்வையிடும் அட்டை இன்றி வருகை தருவதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களையும், வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களையும் பாதுகாத்து அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்கவேண்டிய பொறுப்புடன் வைத்தியசாலை சமூகம் செயற்பட்டு வருகின்றது.
எனவே தயவுசெய்து உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் தொடர்ந்தும் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனவும் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |