இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!
இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்கு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கான அறிவிப்பு
இவ்வாறு இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்காக, ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு சேவையில் ஈடுபடும் இந்தியன் எயார்லைன்ஸ் விமானங்களில் சில இருக்கைகளை வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, இந்த விமானங்களில் பயணிக்க விரும்புவோர், இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தில் வந்து பதிவு செய்யுமாறு அந்த தூதரகம் அறிவித்துள்ளது.
ஜூன் 23, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மட்டுமே இதற்கான பதிவு நடவடிக்கைகள் இடம்பெறும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
விபரங்கள்
இதற்கமைய, டெல் அவிவிலிருந்து(Tel Aviv) ஜோர்தானின் அம்மானுக்கு(Amman, Jordan) போக்குவரத்து வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.
அம்மானில் இருந்து புது டெல்லிக்கு விமான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது.
புது டெல்லியிலிருந்து கொழும்புக்கு இடையிலான விமான பயணச்சீட்டு கட்டணம் அறவிடப்படும்.
மேற்படி, நாடுகளில் உள்ள தூதரகங்கள் சம்பந்தப்பட்ட விமானங்களுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
