வெளிநாட்டவர் எவருக்கும் இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க இடமளிக்க போவதில்லை! - நாலக கொடஹேவா
எந்த வெளிநாட்டவருக்கும் இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க இடமளிக்க போவதில்லை என ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் எதற்கு அரசாங்கம் இணங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்லாங்கொடையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
எந்த வெளிநாட்டவருக்கும் இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க இடமளிக்க போவதில்லை.இந்தியா அல்ல எந்த நாட்டவருக்கும் அதனை செய்ய இடமளிக்க போவதில்லை.
அனைத்து நாடுகளிலும் அரசியல் அடிவருடிகள் இருப்பார்கள். அவர்களை மகிழ்விக்க அந்த நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இந்தியாவும் அப்படித்தான்.
இந்தியா சில அரசியல் அடிவருடிகளை மகிழ்விக்க சில கதைகளை கூறுகின்றது.
இது குறித்து நாம் குழப்பமடைய தேவையில்லை.நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதற்கு அரசாங்கம் இணங்காது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.