தடுப்பூசி விநியோக முறைமையில் திருப்தியில்லை! - ஐ.தே.க
கோவிட் தடுப்பூசி விநியோக நடைமுறைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
காத்திரமான முறையில் தடுப்பூசி ஏற்றும் செயன்முறை ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த தவறியுள்ளதாகவும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் நடைமுறைச் சாத்தியமுடைய செயல் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரே நாளில் ஆறு லட்சம் தடுப்பூசிகளை மக்களுக்கு ஏற்ற முடியும் என மார்தட்டிக் கொண்ட அரசாங்கத்தினால் நாள் ஒன்றுக்கு மூவாயிரம் தடுப்பூசிகளைக் கூட ஏற்ற முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டின் 22 மில்லியன் மக்களுக்கு அரசாங்கம் எவ்வாறு தடுப்பூசி வழங்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



