தமிழ் தெரியாததையிட்டு வெட்கமடைகிறேன்! சிங்கள அமைச்சரின் கவலை
பல்லின மொழிகள் பேசப்படும் இலங்கையில் இருந்துகொண்டு என்னால் சிங்களம் மட்டும் பேச முடியுமென்பதை நினைத்து வெட்கமடைகின்றேன் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நான் வாழ்கின்ற பிரதேசத்தில் நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். தமிழ்மொழி இலங்கையின் அரச கரும மொழியாக இருக்கிறது.
ஆனால் என்னால் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேச முடியும். வணக்கம் நன்றி போன்ற வார்த்தைகளை குறிப்பிடலாம் எனவும் அவர் கூறினார்.
மொழி தொடர்பான தெளிவின்மையே பிரச்சினைக்குக் காரணம்
இந்த நாட்டில் ஒரு இனப் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. நான் அதனை அவ்வாறு பார்க்கவில்லை. எம்மிடம் காணப்படுகின்ற தொடர்பாடல் பிரச்சினையே இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. தொடர்பாடல் இடைவெளி இருந்ததால் நாம் நெருங்கிவரவில்லை.
எம்மால் தொடர்புகளை ஏற்படுத்தமுடியுமாக இருந்தால் அந்த பிரச்சினை வந்திருக்காது. மொழி தொடர்பான தெளிவின்மை அறிவின்மை காரணமாகவே இந்த நெருக்கடிகள் உருவாகின.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்கள மக்களுக்கு விளங்கவில்லை. சிங்கள மக்களின் பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை எனவும் அவர் கூறினார்.