வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
இலங்கையில் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்ற நிறுவனங்களால் மட்டுமே இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, வெளிநாட்டு நாணயத்தை வாங்குவது, விற்பனை செய்வது அல்லது பரிமாற்றம் செய்வது உரிமம் பெற்ற வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிமாற்ற நிறுவனம் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
"இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது வேறு வணிகமோ வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால், அது 2017ம் ஆண்டின் 12ம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயலாகும்".
இதன்படி, எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது வேறு வணிகமோ அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளை மேற்கொள்வது கண்டறியப்பட்டால், அவர்கள் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தின் பின்வரும் இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கி கோருகிறது.
இலங்கை. தொலைபேசி: 0112398827/0112477375/0112398568
மின்னஞ்சல்: dfem@cbsl.lk
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam