நாட்டு மக்களின் மகிழ்ச்சி நீடிக்காது! சபையில் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், இந்த மகிழ்ச்சி தற்காலிகமானதாக அமைந்து விடக்கூடும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற்ற பல நாடுகள் உள்ளன. அவை இரண்டு, மூன்று தடவைகள் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.
மூன்று தடவைகள் வீழ்ச்சி
ஆர்ஜெடினா, கிரீஸ், லெபனான் போன்ற நாடுகளை அதில் உள்ளடக்கலாம்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முறையாக பின்பற்றி நிதி முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுத்த பல்வேறு நாடுகள் முன்னேற்றமடைந்துள்ளன.
இந்நிலையில் எமக்கான சில நிபந்தனைகள் கட்டாயமானது. எனவே நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், இந்த மகிழ்ச்சி தற்காலிகமானதாக அமைந்து விடக்கூடும்”என தெரிவித்துள்ளார்.